News & Events

 

THASL இனால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Hospitality Conclave’
விருந்தோம்பல் துறையில் காணப்படும் அளவற்ற வாய்ப்புக்களை எதிர்காலத்துடன் இணைத்து பயன்படுத்துவதற்கான ஒரு ஒன்றுகூடல்

18-06-18

2018 ஜுன் 20, கொழும்பு : இலங்கை ஹொட்டேல்கள் சங்கம் (THASL) கல்வி அமைச்சு மற்றும் ஷன்கிரி-லா ஹொட்டேல் என்பனவற்றுடன் இணைந்து, பாடசாலை அதிபர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்றினை அண்மையில், கொழும்பு ஷன்கிரி-லா ஹொட்டேலில்; நடைபெற்றது. தொழில்நுட்பக் கல்வியை நாடு தழுவிய ரீதியில் கற்பிக்கும் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 250இற்கும் அதிகமான பாடசாலை அதிபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியானது, இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றதுடன், முதலாவது கட்டத்தில், இத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களின் குழுக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதன் போது இலங்கையில் திறமை தேவைப்படும் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல் பற்றியும், அடுத்த கட்டமாக இடம்பெற்ற கலந்துறையாடலில் இளம் சந்ததியினருக்கு விருந்தோம்பல் துறையில் காணப்படும் எல்லையற்ற வாய்ப்புக்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்நியச் செலாவனியைப் பெற்றுத் தரும் இலங்கையின் மூன்றாவது மிகப்பெரிய மற்றும் நிகர அந்நியச் செலாவணியை நாட்டிற்குக் கொண்டுவரும் இரண்டாவது மிகப்பெரிய துறையான சுற்றுலாத் துறையானது, நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதில் மாபெரும் பங்கை ஆற்றியுள்ளது. அதன் போட்டிமிக்க அம்சங்கள் பற்றி நாட்டின் இளம் சந்ததியினர் அறிந்திருக்காமை கவலைக்குரிய விடயமாகும். ஹொட்டேல் துறையில் காணப்படும் முடிவற்ற இந்த வாய்ப்புக்கள் தொடர்ச்சியாக மாற்றமடையக்கூடிய மற்றும் சவால்மிக்க தன்மை என்பன உள்நாட்டு இளம் சந்ததியினரை துறைக்குள் ஈர்த்து சிறந்த நன்மைகளை அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க உதவும்.

இதற்காக ஈடுபாட்டுடன் செயற்பட்டு வரும் இலங்கை ஹொட்டேல்கள் சங்கம் (THASL) நாட்டின் ஹொட்டேல் தொழிற்துறையின் முழுமையான ஒன்றிணைப்பு நிறுவனமாகும் என்ற ரீதியில், மிக சிறந்த திட்டமொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இத்துறையில் ஈடுபட்டுள்ள இளம் சந்ததியினருக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்கவும், மேலும், விருந்தோம்பல் துறையில் காணப்படும் எல்லையற்ற வாய்ப்புக்கள் பற்றிய தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் வழிவகுக்கிறது.

(THASL) - அதன் முதல் கட்டமாக, 'விருந்தோம்பல் துறையில் 2017 ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்' என்ற தலைப்பின் கீழ், நாடு தழுவிய ரீதியிலான போட்டியொன்றை ஏற்பாடு செய்திருந்தமை விசேடம்சமாகும். அதில் பங்குபற்றியவர்கள் 9 பிரிவுகளாக மதிப்பீடு செய்யப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட ஹொட்டேல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆயிரக்கணக்கான திறமை வாய்ந்த இளம் பங்குபற்றுநர்கள் இதில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கான மிகப் பெரிய விருது வழங்கும் விழா கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்றது.

ஹொட்டேல் தொழிற்துறையை பாடசாலைக் கல்வித் திட்டத்தில் உள்ளடக்குவதன் மூலம், அதன் பிரசித்தியை மேலும் அதிகரித்து, அது தொடர்பான விளக்கத்தை அதிகரிப்பதற்காக (THASL) இரண்டாம் கட்டமாக ‘Hospitality Conclave’ எனும் ஒன்றுகூடலினை சிறந்த தொழில் வல்லுநர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 350 க்கும் மேற்பட்ட பாடசாலை அதிபர்களின் பங்கேற்புடன் இத்தொழில்துறையின் வாய்ப்புக்கள் மற்றும் வளர்ச்சியில் காணப்படும் சந்தர்ப்பங்கள் பற்றி பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கலந்துரையாடியுள்ளனர்.

இத்துடன் இந்த நிகழ்வில் இரண்டு பிரதான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அதில் முதலாவது, 'பாடசாலையிலிருந்து தொழிலுக்கு - இலங்கையின் இளம் சந்ததியினருக்கு திறமையைப் பெற்றுக் கொடுத்தல்' என்ற பெயரிலும், மற்றையது, 'விருந்தோம்பல் இளம் சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்திற்கு' என்ற பெயரிலும் இடம்பெற்றன. இதில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. வை.ஏ.என்.டி. யாப்பா, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி பணிப்பாளர் திரு. மஞ்சுள விதானபதிரன, இலங்கையின் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் திரு. காவன் ரத்நாயக்க மற்றும் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் சுனில் திசாநாயக்க ஆகியோர் முதல் அமர்வுகளில் குழு உறுப்பினர்களாக பணியாற்றினார். இதில் திறமை அடிப்படையிலான கல்வியின் முக்கியத்துவம், பாடசாலைக் கல்வித் திட்டத்தில் விருந்தோம்பலை உள்ளடக்குதல், திறமை அபிவிருத்தியில் காணப்படும் சவால்களை அடையாளம் காணுதல், திறன்களை மேம்படுத்துதல் மற்றும் உயர் கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி ஆகியவற்றிற்கான இடைவெளிகளை ஒழிப்பதில் முக்கியத்துவம்வாய்ந்த விடயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.

இரண்டாவது கலந்துரையாடலின் போது, (THASL) இன் முன்னாள் தலைவரும், லக்சரி விலாஸ் மற்றும் ஹொட்டேல் முகாமைத்துவத்தின் தலைவருமான திரு. அனுர லொக்குஹெட்டி, தேசிய கல்வி நிறுவகத்தின் தொழில்நுட்ப கல்வித் திணைக்களப் பணிப்பாளர் திரு. என்.டி.கே. லொக்குலியன, (THASL) இன் முன்னாள் தலைவர் திரு. சிறிலால் மித்தபால, ஜெட்வின்புளு நிறுவனத்தின் பணிப்பாளர் ஃ பொது முகாமையாளர் திருமதி. ஹயசிந்த் குணவர்தன, மற்றும் தேசபந்து செப். (Chef) டொக்டர் பப்லிஸ் சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது, இலங்கையின் சுற்றுலாத் துறையில் காணப்படும் வளர்ச்சிக்கான வழிவகைகள் அடையாளம் காணப்பட்டன. அதற்காக பாடசாலைகள் ஆற்ற வேண்டிய பங்களிப்பு, தொழில் வாய்ப்புக்களை இளம் சந்ததியினருக்கு உருவாக்குதல், தொழிற்துறையில் வளர்ச்சி மற்றும் ஹோட்டல் துறையில் பெண்களுக்கான வாய்ப்புக்கள் ஆகிய தலைப்புக்கள் கலந்துரையாடப்பட்டன.

2020 ஆம் ஆண்டளவில் சுற்றுலாத் துறையை, இலங்கையின் அதிகூடிய நிகர அந்நியச் செலாவனியை ஈட்டித்தரும் தொழிற்துறையாக மாற்றி, உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாக இலங்கையைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான மேலும் பல பயனுள்ள மற்றும் கருத்துக்களைப் பரிமாறக்கூடிய கலந்துரையாடல்களை எதிர்காலத்திலும் ஏற்பாடு செய்ய THASL எதிர்பார்க்கிறது.